உலக வங்கியின் தலைவர் பதவியிலிருந்து விலகும் டேவிட் மல்பாஸ்

உலக வங்கியின் தலைவர் பதவியை இராஜினாமா செய்வதற்கு டேவிட் மல்பாஸ் (David Malpass) தீர்மானித்துள்ளார். பதவிக் காலம் நிறைவடைவதற்கு ஒரு வருடம் எஞ்சியுள்ள நிலையில், அவர் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார். தமது தீர்மானத்திற்கான காரணம் எதனையும் குறிப்பிடாத David Malpass, எதிர்வரும் ஜூன் மாதம் பதவியை இராஜினாமா செய்வதாக சமூக ஊடகங்களில் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்ட இவர், காலநிலை மாற்றத்திற்கு எதிரான கருத்துடையவர் என விமர்சிக்கப்பட்டார். கனிம எண்ணெய் பாவனை காலநிலை மாற்றத்தை ஏற்படுத்துவதை தாம் அறியவில்லை என்ற கூற்றை வௌ்ளை மாளிகை கண்டித்ததையடுத்து, David Malpass கடந்த ஆண்டு மன்னிப்பு கோரியிருந்தார். 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உலக வங்கியின் தலைவராக David Malpass பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது.

Spread the love