உலகளாவிய உணவு நெருக்கடியை எதிர்கொள்ள இலங்கை தயார்

அடுத்த வருடம் உலகளாவிய உணவு நெருக்கடியை சந்திக்கும் என உலக உணவுத் திட்டம் தெரிவித்தாலும், உலகளாவிய உணவு நெருக்கடியை எதிர்கொள்ள இலங்கை தயாராக உள்ளதாக கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு (2023) நாட்டிற்கு தேவையான அரிசி நுகர்வை நாட்டிலேயே உற்பத்தி செய்ய முடியும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதுள்ள நிலையில், இவ்வருடம் ஒரு கிலோ கிராம் அரிசியின் விலை 300 ரூபாவாக அதிகரிக்கப்படவிருந்த நிலையில், நாட்டிலுள்ள விவசாயிகள் அதிகளவு நெற்செய்கையில் ஈடுபட்டிருந்தமையால், அந்த நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

எனவே, அடுத்த வருடத்தில் குறிப்பிட்டுள்ளபடி அரிசிக்கான விலைக் கட்டுப்பாட்டை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Spread the love