உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய சட்டங்கள் – ஜனாதிபதி

உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தவதற்காக தேசிய கொள்கையொன்று உருவாக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதற்காக எதிர்காலத்தில் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பான கூட்டு பொறிமுறைக் குழுவின் பிரதிநிதிகளை தெளிவுபடுத்துவதற்காக அலரி மாளிகையில் நேற்று(13) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். உணவு பாதுகாப்பு மற்றும் மக்களின் போஷாக்கு நிலையை உறுதிப்படுத்துவதற்கான தேசிய கொள்கை தொடர்பான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

உணவு பாதுகாப்பு மற்றும் மக்களின் போஷாக்கு நிலையை உறுதிப்படுத்துவதில் துல்லியமான தரவுகளை பெற வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இதன்போது தௌிவுபடுத்தியுள்ளார்.  தேசிய மட்டம் மற்றும் பிரதேச மட்டத்தில் கிடைக்கும் தரவுகளில் பாரிய வேறுபாடுகள் காணப்படுவதாகவும் அவற்றை உடனடியாகத் திருத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது வலியுறுத்தினார்.

Spread the love