உக்ரைனில் ஏவுகணை தாக்குதல்; 43 பேர் காயம்

உக்ரைனின் Kharkiv பிராந்தியத்திலுள்ள குடியிருப்பு கட்டடமொன்றின் கார் தரிப்பிடத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 12 சிறுவர்கள் உள்ளிட்ட குறைந்தது 43 பேர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது காயமடைந்தவர்களில் 10 மாதம் மற்றும் ஒரு வயதான இரு குழந்தைகள் அடங்குவதாக கூறப்படுகின்றது. ரஷ்யாவின்  ஏவுகணை தாக்குலாக இருக்கும் என நம்பப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதலுக்கு இலக்கான பகுதியில் குடியிருப்பு கட்டடங்கள் மாத்திரமே அமைந்துள்ளதாக உக்ரைன் சட்ட மா அதிபர் Andriy Kostin தெரிவித்துள்ளார்.

குடியிருப்பு கட்டடங்களை இலக்கு வைப்பது ரஷ்யாவின் மற்றுமொரு போர் குற்றம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த தாக்குதலில் கட்டடங்கள் பல சேதமடைந்துள்ள மற்றும் புகை மண்டலம் மேலெழும் நிழற்படங்களை Kharkiv பிராந்திய ஆளுநர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

ஏவுகணை தாக்குதலுக்கு இலக்கான Pervomaisky நகருக்கு அருகிலுள்ள சுமார் அரைவாசி நகரங்கள் மக்கள் வசிக்க முடியாத நிலையிலுள்ளதாக பிராந்திய ஆளுநர் உள்நாட்டு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

Spread the love