இலங்கை கிரிக்கெட் அணி அறிவிப்பு

அவுஸ்திரேலியாவுக்கு சுற்று பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவினால் தெரிவு செய்யப்பட்டுள்ள 20 பேரடங்கிய குழுவை இன்று இலங்கை கிரிக்கெட் ஊடக பிரிவு வெளியிட்டுள்ளது.

அவுஸ்திரேலியா தொடருக்கான பயிற்றுவிப்பாளராக கடந்த தொடரில் கடமையாற்றிய ருமேஷ் ரத்நாயக்க இந்த தொடருக்கும் நியமிக்கப்பட்டுள்ளார்.கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தலில் உள்ள அவர் தனிமைப்படுத்தல் நிறைவடைந்ததும் அவுஸ்திரேலியாவுக்கு செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணியின் தலைவராக தஸூன் சாணக்க தொடரும் அதேவேளை, சரித் அசலங்க உபதலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அண்மையில் தனது ஓய்வினை அறிவித்து, மீளப்பெற்றுக்கொண்ட பானுக்க ராஜபக்ஷ அணியில் சேர்க்கப்படவில்லை. சிம்பாவே தொடரில் ஓய்வு வழங்கப்பட்ட வீரர்கள் மீண்டும் அணிக்குள்இணைக்கப்பட்டுள்ளனர்.

கமில் மிஷாரா என்ற 20 வயதான ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஒருவர் அணிக்குள் சேர்க்கப்பட்டுள்ளார். 20-20 போட்டிகளில் 12 இன்னிங்கில் 171 ஓட்டங்களை பெற்றுள்ளவர் ஏன் அணிக்குள் இணைக்கப்பட்டுளார் என்ற கேள்வி ஏற்பட்டாலும், ஒரு நாள் போட்டிகள் ஒன்பதில் 3 சதங்களுடன் 437 ஓட்டங்களை பெற்றுள்ளார். 28 வயதான மித வேகப்பந்துவீச்சாளரான ஷிரோன் பெர்னாண்டோவும் அணிக்குள் சேர்க்கபப்ட்டுள்ளார்.

5 டுவென்டி டுவென்டி போட்டிகள் அடங்கிய தொடரில் அவுஸ்திரேலியா அணியுடன் விளையாடவுள்ள இலங்கை அணி அதன் பின்னர் இந்தியாவுக்கு செல்லவுள்ளது.

அணி விபரம்
தஸூன் சாணக்க, சரித் அசலங்க, அவிஷ்க பெர்னாண்டோ,பத்தும் நிஸ்ஸங்க, தனுஷ்க குணதிலக்க, குசல் மெண்டிஸ், தினேஷ் சந்திமால், சமிக்க கருணாரத்ன, ஜனித் லியனகே, கமில் மிஷாரா, ரமேஷ் மென்டிஸ், வனிது ஹசரங்க, லஹிரு குமார, நுவான் துஷார, டுஷ்மந்த சமீர, பினுர பெர்னாண்டோ, மகேஷ் தீக்ஷனா, ஜெஃப்ரி வாண்டர்சாய், பிரவீன் ஜெயவிக்ரம, ஷிரான் பெர்னாண்டோ

Spread the love