இலங்கையில் நீண்டகாலமாயிருக்கும் தண்டனை விலக்க வேண்டும்

இலங்கையில் நீண்டகாலமாக நிலவி வரும் தண்டனையின்மை மற்றும் ஊழல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வில் பேசிய அமெரிக்க பிரதிநிதி, ஒரு முக்கிய நடவடிக்கையாக இவற்றுக்கு தீர்வை காணவேண்டும் என கூறியுள்ளார். 

மேலும், சட்டத்தின் ஆட்சி, நீதி மற்றும் சுதந்திரம் ஆகியவை ஜனநாயக அமைப்புகளின் முக்கிய தூண்கள் என இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை இலங்கையில் பயங்கரவாத தடை சட்டங்களில் முன்மொழியப்பட்ட மாற்றங்களை ஏற்றுக்கொண்டு தாம் வரவேற்பதாக ஜப்பான் அறிவித்துள்ளது. ஆனால் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அர்த்தமுள்ள நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்றும் ஜப்பான் வலியுறுத்தியுள்ளது. இதேவேளை பொறுப்புக் கூறல், உண்மை மற்றும் நீதிக்காக வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்த போதிலும், மிகக் குறைவான முன்னேற்றமே ஏற்பட்டுள்ளதாக சுவிற்சர்லாந்து கவலை வெளியிட்டுள்ளது.

இதேவேளை இலங்கையில் பாலின அடிப்படையிலான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது அமர்வில் அயர்லாந்து சுட்டிக்காட்டியுள்ளது. இந்த வன்முறை காரணமாக பெண்கள் மற்றும் சிறுமிகள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருவது குறித்து அயர்லாந்து கவலையை வெளிட்டுள்ளது. மேலும் பயங்கரவாத தடைச் சட்டத்தை மாற்றியமைப்போம் என்ற இலங்கை அரசாங்கத்தின் வாக்குறுதியை வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளது. அத்தோடு சர்வதேச சட்டத் திற்கு முழுமையாக இணங்கும் வரை பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என அயர்லாந்து வலியுறுத்தியுள்ளது.

Spread the love