இலங்கையில் சீனாவின் செல்வாக்கை உறுதி செய்யும் கடலட்டை பண்ணைகள்

பெரும் அன்னிய செலவாணியை ஈட்டித்தரும், சீனர்களின் பிரசித்திபெற்ற இந்த உணவு பெய்ஜிங்கிற்கும் புது டில்லிக்கும் இடையிலான போட்டியைத் தீவிரப்படுத்துகிறது.

இந்தியாவில் இருந்து சுமார் 50 மைல்களுக்கு அப்பால் சென்று, வட இலங்கைக் கடற்பரப்பில், வடபகுதி மீனவர்களின் மீன்பிடி உபகரணங்களையும் மீன்வளத்தையும் முற்றுமுழுதாக ஆழிப்பதாகக் கூறப்படும் இந்திய இழுவைப் படகுகளால் கந்தசாமி கலாமோகனும் , அவரது சக மீனவர்களும் மிகவும் சோர்வடைந்துள்ளனர்.

இதன் காரணமாக அவர் கடந்த ஆண்டு, புதிய, வேகமாக வளர்ந்து வரும் கடலட்டை உற்பத்தியில் ஈடுபட ஆரம்பித்தார். அருகிலுள்ள சீனர்களின் நிறுவனத்தின் மூலம் விநியோகம் செய்யப்படும் கடலட்டை குஞ்சுகளை, சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதற்காக தனது கடலில் அமைத்துள்ள பண்ணையில் வளர்க்கிறார். அவை சீனாவில் ஒரு கிலோ (பதப்படுத்தப்பட்ட கடலட்டை) நூற்றுக்கணக்கான டொலர்களுக்கு விற்கப்படுகிறது.

கடலட்டை

இந்திய இழுவைப் படகுகளால் கடலில் மீன்கள் மிகவும் குறைவாகவே உள்ளன என்று கூறும் கலாமோகன், இதற்கு முன்பு இரண்டு சிறிய மீன்பிடி படகுகளை கொண்டிருந்தார். இதனால் சொந்தமாக வேறு தொழிலை செய்ய விரும்பினேன். இந்தத் (கடலட்டைப் பண்ணை) மிகவும் இலாபகரமானதாக இருந்தது.

வடபகுதியின் ஆழமற்ற கடல் அட்டை வளர்ப்பிற்கு ஏற்றதாக இருப்பதாகக் கூறும் யாழ்ப்பாண கடலட்டை உற்பத்தியாளர் சங்கத் தலைவர் எம் திவாகரன், ” கடந்த ஆண்டு 40 ஆக இருந்த பண்ணைகள் தற்போது 250 ஆக அதிகரித்துள்ளதாக” கூறுகிறார். இந்த புதிய உற்பத்தி முயற்சிகள் அளவில் சிறியனதாக இருந்தாலும், 22 மில்லியன் மக்கட் தொகையைக் கொண்ட, கேந்திர முக்கியத்துவம் மிக்க இடத்தில் அமைந்துள்ள இந்த சிறிய தீவு எதிர்பாராதவிதமாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான அதிகாரப் போட்டியை ஏற்படுத்தியுள்ளது.

குய் லன் (Gui Lan sea cucumber hatchery) கடலட்டை குஞ்சு பொரிப்பகம்

2009 இல் முடிவடைந்த 26 ஆண்டுகால உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் வட பகுதி, நீண்ட காலமாக கலாச்சார ரீதியாகவும் புவியியல் ரீதியாகவும் இந்தியாவுடன் நெருக்கமாக உள்ளது, தமிழ் மக்கள் பாக் நீரிணையின் இருபுறமும் வாழ்கின்றனர். சீனா இலங்கையில் ஆழமான இராஜதந்திர மற்றும் பொருளாதார ரீதியிலான முதலீடுகளை மேற்கொண்டு வந்தபோதிலும், பெரும்பாலும் வடக்கில் இருந்து விலகியே இருந்து வந்துள்ளது.

ஆனால் இப்பகுதியில் சமீபத்திய சீனாவின் புதிய ஆர்வம் பெய்ஜிங்கிற்கும் புது டெல்லிக்கும் இடையே பதட்டங்களை எழுப்பியுள்ளது கடந்த டிசம்பரில், சீனாவின் தூதர் குய் ஷென்ஹோ (Qi Zhenhong) இப்பகுதிக்கு அபூர்வமான வகையில் ஒரு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்தார். கடலட்டை குஞ்சு பொரிப்பகம் உள்ளிட்ட சீன வணிக நிறுவனங்களுக்குச் சென்ற அவர், இந்திய இழுவைப்படகுகளால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உதவிப் பொருட்களை விநியோகித்தார். (வட இலங்கையின்) இந்தியக் கடற்கரைக்கு மிக அண்மையான இடம் ஒன்றில் நின்ற தூதுக்குழுவினர் ஆளில்லா விமானத்தை பறக்கவிட்டபோது இந்த விஜயம் புது தில்லியை எச்சரித்தது.

சீனத் தூதர் குய் ஷென்ஹோ (Qi Zhenhong)

ஆனாலும், , புறக்கணிக்கப்பட்ட இப் பிராந்தியத்தில், சீனாவின் இவ் வருகையை உள்ளூர்வாசிகளில் பலர் ஒரு அரிய வாய்ப்பாகக் கருதுகின்றனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் இருக்கும், யாழ்ப்பாணத்தின் வடபகுதி நகரத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன், “முதலீடு, வேலை வாய்ப்புக்களை உருவாக்குதல் மற்றும் அதனுடாக வருமானத்தைப் ஈட்டுவதில் ஆர்வம் காட்டுபவர்களை நாங்கள் வரவேற்கிறோம். “யாழ்ப்பாணம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. . . எங்களுக்கு [சீன] நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்பங்கள் தேவை’ என்று கூறுகிறார்.

“எங்களுடைய மக்கள் பசியுடன் இருக்கிறார்கள், எமக்கு யார் உதவினாலும் எமக்கு அதுபற்றிய அக்கறை இல்லை. அது இந்தியாவாக இருந்தாலும் சரி சீனாவாக இருந்தாலும் சரிதான்” என யாழ் மீனவ சம்மேளனத்தின் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். “சீனா எங்கள் சிரமங்களை உணர்ந்து உதவிக்கு வந்தது.” என அவர் கூறுகிறார்.

இலங்கை இந்தியா மற்றும் சீனாவுடன் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சிறந்த உறவுகளைக் கொண்டுள்ளது. டெல்லி மற்றும் பெய்ஜிங் ஆகிய இரண்டும் பரப்புரை, கடன் மற்றும் ஆயுத விற்பனை மூலம் (இலங்கையில் தமது) செல்வாக்கிற்கு ஆவேசமாக போட்டியிடுகின்றன. இலங்கையில் அவர்களின் போட்டி, சூழவுள்ள எந்த நாட்டையும் விட “மிகவும் வெளிப்படையானது மற்றும் ஒளிவு மறைவற்றது. கடந்த ஆண்டில், இந்தப் போட்டி மிகவும் கடுமையான முறையில் உருவாகியுள்ளது.” என்று ஒரு இராஜதந்திரி கூறினார்.

(இலங்கையில்) சீனாவின் முதலீடு அதன் பெல்ட் அன்ட் ரோட் (Belt and Road Initiative – B&R) திட்டத்தின் மூலம் ஆரம்பமானது. ஆக்க குறைந்தது 3.5 பில்லியன் டோலர் கடன் உதவியை இலங்கைக்கு வழங்கியதன் ஊடாக, இலங்கையின் மிகப்பெரிய கடன் வழங்குநர்களில் ஒருவராக சீனா மாறியுள்ளதுடன் உலகின் மிகவும் பரபரப்பான சில கப்பல் பாதைகளுக்கு அருகில், அதன் தெற்கு கடற்கரையில் அமைந்துள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.

சீனக் கடனுதவிகள் இலங்கையை நெருக்கடிக்குள் தள்ளுவதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அன்னியச் செலாவணிப் பற்றாக்குறையால் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் இலங்கை, கடந்த மாதம் சீனாவிடம் தனது கடன்களை மறுசீரமைக்குமாறு கேட்டுக் கொண்டது. இதே தருணத்தில் இந்தியா சுமார் 1 பில்லியன் டொலர் உதவியை இலங்கைக்கு வழங்கியதுடன், வெளிவிவகார மைச்சர் ஜி எல் பீரிஸ் அவர்களை இந்தியாவில் சந்தித்ததன் ஊடாக இராஜதந்திர ரீதியில் சீனாவிற்குப் பதிலளித்துள்ளது.

பல்வேறு நாடுகளில் சீனா மேற்கொண்ட ஒத்துழைப்பு முயற்சிகள் பாரிய வெற்றியை தந்ததை போன்று, அண்மையில் இலங்கையின் வட பகுதியில் மேற்கொண்ட ஒத்துழைப்பு முயற்சிகள் எந்த அளவிற்கு பயனளிக்கும் என்பதில் ஆய்வாளர்கள்வேறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளனர்.

பெரும்பான்மை சிங்களவரிடம் இருந்து சுதந்திரத்திற்கான தமிழர்களின் விடுதலைப் போரின் மையமாக வட இலங்கை இருந்தது. அப்போதைய இராணுவத் தளபதி கோட்டாபய இராஜபக்ஷ தலைமையில் தமிழ்ப் பிரிவினைவாதிகள் நசுக்கப்படுவதற்கு முன்னர் அப்போரில் ஏறக்குறைய 100,000 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

இலங்கையின் மிகவும் குறைந்த வளர்ச்சியடைந்த பிராந்தியங்களில் ஒன்றாக வட பகுதி உள்ளதுடன் மோதலுக்குப் பின்னரான சூழலில் ஒரு அரசியல் தீர்வு இல்லாததை உள்ளூர் வாசிகள் குறை கூறுகிறார்கள். மோதலின் போது கோட்டாபயவின் சகோதரர் மகிந்த தலைமையிலான ராஜபக்ச அரசாங்கத்தை ஆதரித்த சீனா மீதும் அவர்களுக்கு ஆழ்ந்த அதிருப்தி உள்ளது.

பாசையூர் மீனவர் சங்கத் தலைவர் பி.மதன்

சீன முதலீடுகளுக்கு எதிராக போராட்டங்களை ஏற்பாடு செய்த, பாசையூர் மீனவர் சங்கத் தலைவர் பி.மதன் “நான் தலைவராக இருக்கும் வரை சீனர்கள் இங்கு வர அனுமதிக்கப்பட மாட்டார்கள்” எனக் கூறுகிறார்.

வடக்கிலிருந்து சீனாவை விலக்கி வைக்க இந்தியாவும் தலையீடு செய்தது. சீனத் தூதுவரின் வருகைக்கு சற்று முன்னர், யாழ்ப்பாணத்தின் கடற்கரையில் (சீனாவின்) புதுப்பிக்கத்தக்க மின்சக்தித் திட்டத்தை பாதுகாப்புக் காரணங்களுக்காக இடைநிறுத்துவதற்கு இந்தியா (இலங்கையை) சம்மதிக்க வைத்ததாக சீனா அறிவித்தது.

(இந்தியாவின்) இழுவைப் படகுகள் தங்கள் வாழ்வாதாரத்தை அழிப்பதாக குற்றம் சாட்டும் உள்ளூர் மீனவர்களிடமிருந்து இந்தியாவும் வெறுப்பை எதிர்கொள்கிறது. இலங்கை(கடற்படை)யால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மற்றும் இரண்டு இலங்கை மீனவர்கள்(வடபகுதி) கடலில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவங்களால் பல ஆண்டுகளாக நீடித்த இந்தப் பிரச்சனைஅண்மைய மாதங்களில் தீவிரமடைந்தது.

“இந்தியர்கள் சுதந்திரமாக (எங்கள் கடலிற்கு) வருகிறார்கள், வந்து எங்கள் மீன்களைக் கொள்ளையடித்துச் செல்கிறார்கள்” இவர்கள் வந்து எமது வாழ்வாதாரத்துக்குத் தேவையானவற்றை எடுத்துக்கொண்டால் நாங்கள் எப்படி வாழ முடியும்?” என யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 26 வயது மீனவர் எஸ்.பகீகரன் கூறுகிறார்.

இப்பகுதியில் நீண்ட காலமாக கடலட்டைகள் பிடிக்கப்பட்டுவரும் நிலையில், கடந்த ஆண்டில் ஏற்றுமதி சார் பண்ணைகளின் வருகை விரைவுபடுத்தப்பட்டுள்ளது. சில மாதங்களில் முழு அளவில் வளரக்கூடிய இவ் உயிரினங்கள்(கடலட்டைகள் ), ஹோங்கொங் அல்லது சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்டு பின்னர் சீனாவின் பிரதான நிலப்பகுதிக்கு விற்கப்படுகின்றன. அங்கு அவை தோலின் தன்மை மற்றும் அதன் மென்மையான உட்பகுதியின் தன்மையின் அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

குய் லன் (Gui Lan sea cucumber hatchery) கடலட்டை குஞ்சு பொரிப்பகம்

ஆக்க குறைந்தது 400 மீனவர்கள் கடலட்டைப் பண்ணைகளை அமைக்க அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளனர். மேலும் சீனர்களுக்குச் சொந்தமான குய் லன் (Gui Lan sea cucumber hatchery) கடலட்டை குஞ்சு பொரிப்பகம் முன்னெப்போதையும் விட பரபரப்பாக இயங்குகிறது.

கடலட்டை பண்ணை

ஆனால் பங்குதாரர்களில் ஒருவரான ஸ்டீவன் கொங் (Steven Gong), புவிசார் அரசியல் பரபரப்பால் குழப்பமடைந்துள்ளார். தைவானைச் சேர்ந்த கொங், மூன்று தசாப்தங்களாக இலங்கையில் வசித்து வரும் அவர், சீனாவின் பிரதான நிலப்பகுதியைச் சேர்ந்த பல பங்காளர்களுடனும் மற்றும் முதலீட்டாளர்களுடன் சேர்ந்து குஞ்சு பொரிப்பகத்தை நடத்துகிறார்.

அவர்கள் இன்னும் லாபம் ஈட்டவில்லை. அவர்களது குழந்தைகள் கடலட்டைகளை வளர்க்கும் ஒரு சாதாரண கடலோர குடியிருப்பில் தொடர்ச்சியாகப் பல மாதங்கள் வாழ்கின்றனர். ஆனால் வேகமாக வளர்ந்து வரும் வாடிக்கையாளர் தளம் மற்றும் சீனாவின் அதிகரித்துவரும் தேவை ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் கொங் அவர்களது நிலைமை நேரெதிராக உள்ளது.

Spread the love