இலங்கையின் பொருளாதாரம்  2.6 வீதமாகக் குறைவு சர்வதேச நாணய நிதியம் அறிக்கை

இலங்கையின் 2022ஆம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 2.6 வீதமாகக் குறைந்துள்ளது என்று சர்வதேச நாணயநிதியத்தால் வெளியிடப்பட்டுள்ள உலக பொருளாதார அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது கடந்த ஆண்டு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3.6 வீதமாக இருந்தது.

இந்த ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 2.6 வீதமாகக் குறைந்துள்ளது. இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2023ஆம் ஆண்டில் 2.7 வீதமாகவும், 2029ஆம் ஆண்டில் 2.9 வீதமாகவும் இருக்கும். ஓமிக்ரோன் பிறழ்வின் தாக்கத்துக்கு பின்னர், இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இருந்து உலகளாவிய மீட்பு வலுவடையும் எனினும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு மற்றும் விரோதங்களை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுப்பதை நோக்கமாகக் கொண்ட பொருளாதாரத்தடைகள் காரணமாக, பொருளாதார வளர்ச்சி இன்னும் மோசமடைந்துள்ளது. அதற்கமைவாக 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் உலகளாவிய வளர்ச்சி 3.6 வீதமாகக் கணிக்கப்பட்டுள்ளது  என்றுள்ளது.

Spread the love