இலங்கையின் நிலைமைக்கு ஊழல் அமைச்சர்களே காரணம்- பகிரங்கமாக குற்றம் சுமத்திய ஜனாதிபதி

இலங்கையின் தற்போதைய நிலைமைக்கு ஊழல் அமைச்சர்களே காரணம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளார்.

ஊழல் அமைச்சர்களுடன் தனக்கு பிரச்சினை இருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டைக் கட்டியெழுப்ப தமக்கு நல்ல தொலைநோக்கு பார்வைகள் மற்றும் திட்டங்கள் இருப்பதாகவும், ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்தத் தவறியதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஊழல் நிறைந்த அமைச்சரவையினால் தான் எதையும் வெற்றிகரமாக செய்யவில்லை என ஜனாதிபதி கூறினார். அண்மையில் தொழிற்சங்க பிரதிநிதிகள் குழுவுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு பதில் ஜனாதிபதி பதவி விலகவேண்டும் என மக்கள் போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Spread the love