இன்றும் 4 அலுவலக ரயில் சேவைகள் இரத்து- ரயில்வே திணைக்களம்

ரயில் சாரதிகளின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இன்றும்(25) 4 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அவை அனைத்தும் அலுவலக ரயில் ​சேவைகள் என ரயில்வே பொதுமுகாமையாளர் N.J.இதிபொலகே தெரிவித்தார்.

ரயில் சாரதிகளின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நேற்று(24) சுமார் 60 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Spread the love