இந்திய அளவில் தனுஷ் முதலிடம்

இந்தியாவின் பிரபல திரை நட்சத்திர பட்டியவில் நடிகர் தனுஷ் முதலிடம் பெற்றுள்ளதாக பிரபல திரைப்பட ரேட்டிங் மற்றும் தகவல் தளமான IMDB (ஐஎம்டிபி) அறிவித்துள்ளது. சர்வதேச அளவிலான திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஓடிடி படைப்புகள் உள்ளிட்டவற்றின் தகவல்களை சேகரித்து வழங்கும் ஆன்லைன் தகவல் தளம் IMDB இந்த தளத்தின் சார்பில், மிகவும் பிரபலமான சினிமா நட்சத்திரங்கள் பட்டியல் ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் வெளியிடப்பட்டு வருகிறது.

அதன்படி, நடப்பு 2022 ஆம் ஆண்டின் ‘டொப் 10 இந்திய நட்சத்திரங்களின் பட்டியலை IMDB வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய அளவில்முதலிடம் பிடித்துள்ளார் நடிகர் தனுஷ். தனுஷ் நடித்த ‘தி க்ரே மேன்’ ஹாலிவுட் திரைப்படம் முதல் தமிழ் திரைப்படமான ‘திருச்சிற்றம் பலம்” வரையிலான அவரது வெற்றிப்படங்கள் இந்த சாதனைக்கு களம் அமைத்து கொடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் தனுஷுக்கு அடுத்தபடியாக பிரபல பொலிவுட் நடிகை அலியா பட் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். மூன்றாம் இடத்தை பொன்னியின் செல்வன் -1 படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய் பெற்றுள்ளார். நான்காவது இடம் தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த ராம்சரண் தேஜா பிடித்துள்ளார். தொடர்ந்து 5ஆவது இடத்தில் ‘யசோதா திரைப்படத்தில் நடித்திருக்கும் சமந்தா பிடித்திருக்கிறார். அதற்கடுத்த 6, 7,8, 9 மற்றும் 10வது இடங்களை பொலிவுட் நட்சத்தி ரங்களான ஹிர்த்திக் ரோஷன், கியரா அத்வானி, தெலுங்கு நட்சத்திரங்களான ஜூனியர் என்டிஆர்,அல்லு அர்ஜூன் மற்றும் KGF-2 படத்தில் நடித்த நடிகர் யாஷ் பிடித்துள்ளனர்.

Spread the love