அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் ஆஷ்லே பார்டி வெற்றி


44 ஆண்டுகளுக்குப் பின்னர் குறித்த தொடரில் பட்டத்தை வென்ற முதல் அவுஸ்திரேலிய வீராங்கனை என்ற பெயரையும் ஆஷ்லே பார்டி வென்றுள்ளார். மெல்பேர்னில் நடைபெற்றுவரும் ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற குறித்த தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டி நேற்று இடம்பெற்றது.

இதில் அமெரிக்க வீராங்கனையான டேனியல் காலின்ஸை எதிர்கொண்ட ஆஷ்லே பார்டி போட்டியின் முதல் செட்டை 6-3 என கைப்பற்றினார். இதனை அடுத்து விறு விறுப்பாக இடம் பெற்ற இரண்டாவது செட்டை பிரெக்வரை நீடிக்க அதனையும் போராடி ஆஷ்லே பார்டி 7-6 என கைப்பற்றினார். முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற டேனியல் காலின்ஸை 6-3, 7-6 என்ற கணக்கில் தோற்கடித்து மூன்றாவது பட்டத்தை வென்றார். 

Spread the love