அவுஸ்திரேலிய ஓபன் பெண்கள் இரட்டையர் பிரிவு- செக் குடியரசு ஜோடி சம்பியன் பட்டம்

அவுஸ்திரேலிய ஓபன் மகளிர் இரட்டையர் பிரிவில் முதல் நிலை வீராங்கனைகளான பார் போரா கிரெஜ்சிகோவா, கேடரினா சினியாகோவா ஆகியோர் இறுதிப் போட்டியில் அன்னா டானிலினா மற்றும் பீட்ரிஸ் ஹடாட் மியாவை தோற்கடித்து தங்களது முதல் பட்டத்தை வென்றனர். மெல்போர்னின் ராட் லேவர் அரினா அரங்கில் ஞாயிற்றிக்கிழமை ஆரம்பமான இப்போட்டியில் செக் ஜோடி 6-7 (3-7) 6-46-4 என்ற செட் கணக்கில் போராடி வென்றது. இந்த ஆட்டம் இரண்டு மணிநேரம் 42 நிமிடங்கள் நீடித்தது. 2021 அவுஸ்திரேலிய ஓபனில் இரண்டாம் இடத்தை பிடித்த கிரெஜ்சிகோவா மற்றும் சினியாகோவாவுக்கு இது நான்காவது பெரிய பட்டமாகும்.

Spread the love