அமெரிக்க திறைசேரியின் பிரதி உதவி செயலாளர், திறைசேரி செயலாளர்,மத்திய வங்கி ஆளுநரிடையே சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க திறைசேரியின் ஆசியாவிற்கான பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத், திறைசேரி செயலாளர் மற்றும் மத்திய வங்கி ஆளுநரைச் சந்தித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்டுள்ள ஊழியர் மட்ட ஒப்பந்தம் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி மற்றும் இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் முயற்சிகள் தொடர்பில் எடுக்கப்படக்கூடிய நிலையான தீர்வுகள் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாக அமெரிக்க தூதுவர் தனது டுவிட்டர் கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love