அத்தியாவசிய பொருட்களுக்கு மீண்டும் கட்டுப்பாட்டு விலை, நிதி அமைச்சருடன் ஆலோசனை

அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலையை மீண்டும் அறிமுகப்படுத்த நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக அடுத்த வாரம் நிதி அமைச்சருடன் கலந்துரையாடவுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் குணபால ரத்னசேகர தெரிவித்தார்.

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியானது கட்டுப்பாட்டு விலையை மீள அமுல் படுத்துவதில் தடையாக உள்ளதாக அவர் தெரிவித்தார். அரிசி, கோதுமை மா. பால்மா உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்களின் கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love