அதிரடி சண்டைக் காட்சிகளுடன் விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ ட்ரெய்லர் வெளியானது

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள வீரமே வாகை சூடும் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

விஷால் தனது சொந்த பேனரான விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சார்பாக, து.ப. சரவணன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் வீரமே வாகை சூடும் படம் உருவாகியுள்ளது.

இயக்குனர் து.ப.சரவணனுக்கு இது முதல்படமாகும். படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாத்தி நடித்துள்ளார். இவர்களுடன் யோபிபாபு, வில்லனாக பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Spread the love