அடுத்தடுத்து மூன்று ஏவுகணைகளை ஏவி பரிசோதித்த வடகொரியா

வட கொரியா நேற்று புதன்கிழமை அதிகாலை அதன் கிழக்கு கடற்கரையில் மூன்று பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியதாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது முதல் ஆசியப்பயணத்தை நேற்று முன்தினம் முடித்துக்கொண்டு வெளியேறிய மறுநாள் இந்தச்சோதனை இடம்பெற்றுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யும் நேரத்தில் வட கொரியா அணு ஆயுதச் சோதனை நடத்தனம் என முன்னரே எச்சரிக்கப்பட்டு இருந்தது.

எனினும் அவரது ஆசியப் பயணம் முடிவடைந்து புறப்பட்ட மறுநாள் 3 ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவி வட கொரியா சோதனை நடத்தியுள்ளது. தென் கொரியாவுக்கு விஜயம் செய்த அமெரிக்க ஜனாதிபதி, வட கொரியாவின் தொடர் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ஏதுவாக தென் கொரியா – அமெரிக்கா இடையிலான கூட்டு இராணுவ பயிற்சிகளை விரிவாக்குவது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து தென் கொரிய ஜனாதிபதியுடன் பேசினார்.

இது வட கொரியாவை ஆத்திரமடையச் செய்துள்ளது. நீண்டகாலமாக செயலற்ற நிலையில் இருந்த அணு உலையில் கட்டுமானத்தையும் வட கொரியா மீண்டும் தொடங்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Spread the love