அகதிகள் படகு, லிபியா அருகே கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் அதிலிருந்த 73 போ் உயிரிழப்பு

ஐரோப்பிய நாடுகளை நோக்கி பயணித்த அகதிகள் படகு, லிபியா அருகே கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் அதிலிருந்த 73 போ் உயிரிழந்துள்ளனா்.

ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் பெற விரும்பிய அகதிகளை சட்டவிரோதமாக ஏற்றிச்சென்ற படகு லிபியா அருகே மத்தியதரைக் கடல் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை கவிழ்ந்து விபத்திற்குள்ளானதாக  UNHCR வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடலில் மூழ்கியவர்களில் 11 பேரின் உடல்கள் லிபியாவின் மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டுள்ளன. 7 பேர் உயிர் தப்பி கரைக்கு சென்றுள்ளனர். அவர்களின் உடல் நிலை மோசமாக இருந்ததால், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

போா் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்ட ஆபிரிக்கா மற்றும் மேற்கு ஆசிய நாடுகளைச் சோ்ந்த ஏராளமானவா்கள், ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் தேடி மத்தியதரைக் கடல் வழியாக ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனா்.

அண்மைக்காலமாக, அத்தகைய அகதிகளை சட்டவிரோதமாக அழைத்துச் செல்வதற்கான போக்குவரத்து மையமாக லிபியா உருவாகி வருகிறது. இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் மத்தியதரைக் கடல் வழியாக ஆபத்தான பயணத்தில் ஈடுபட்ட 130-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

Spread the love