இலங்கையின் மனித உரிமை நிலைவரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மீது இன்று இடம் பெறவிருந்த விவாதம் பிற்போடப்பட்டுள்ளது.
உக்ரைனில் ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கையினால் உருவாகியுள்ள நிலைமை குறித்து மனித உரிமை பேரவை அவசரமாக விவாதிக்கப்பட வேண்டிய நிலை காணப்படுவதாலேயே இலங்கை குறித்த கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளது. ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கை தொடர்பான விசேட விவாதம் இன்று 3ஆம் திகதி இடம் பெறும். இதுதொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவாக மனித உரிமை பேரவையின் 47 உறுப்பு நாடுகளில் 29 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன. இலங்கை தொடர்பான விவாதம் மேலும் ஒரு நாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.