உலக சுகாதார அமைப்பும், இலங்கையின் சுகாதார அமைச்சும் இணைந்து கூட்டு வங்கிக் கணக்கு பொறிமுறை ஒன்றை ஆரம்பிக்கவுள்ளன. வெளிநாட்டு நாடுகளின் உதவியை ஏற்றுக்கொள்ளும் வகையில், இது சிறந்த வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சிக்கு மத்தியில் மருந்து இறக்குமதியாளர்கள் உள்நாட்டில் டொலரை பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இந்தநிலையில் பற்றாக்குறையாக உள்ள மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை பெற்றுக்கொள்வதை துரிதப்படுத்த உலக சுகாதார அமைப்புடன் இணைந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி வைத்திய கலாநிதி அலகா சிங் உடன் அண்மையில் நடத்திய சந்திப்பை அடுத்து இந்த கூட்டு வங்கிக் கணக்குக்கு உலக சுகாதார அமைப்பு, 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வைப்பிலிட உடன்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.