X-Press Pearl பாதிப்பிற்கு நட்டஈடு கோரி, சிங்கப்பூர் நீதிமன்றில் வழக்கு தாக்கல – சட்டமா அதிபர் சஞ்சய ராஜரட்ணம்

X-Press Pearl கப்பல் விபத்திற்குள்ளானதில் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு நட்டஈடு கோரி, சிங்கப்பூர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.  சிங்கபூர் சட்டத்தரணிகள் நிறுவனம் ஒன்றின் ஊடாக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக சட்டமா அதிபர் சஞ்சய ராஜரட்ணம் தெரிவித்தார்.

குறித்த நட்டஈட்டுத் தொகை தொடர்பான விபரங்களை எதிர்வரும் நாட்களில் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க உள்ளதாகவும் இது தொடர்பிலான விரிவான அறிக்கை கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையிடம் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சிங்கப்பூர் கொடியுடன் X-Press Pearl கப்பல் 2021 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் திகதி  விபத்திற்குள்ளானதில் இலங்கை  கடல்பரப்பில் பாரியளவில் பாதிப்புகள் ஏற்பட்டிருந்தன. 

இதனிடையே, இந்த விபத்தினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய முறையில் நட்ட ஈடு வழங்கப்படவில்லை என தெரிவித்து நீர்கொழும்பு – கொத்தலாவல பாலம் அருகில் இன்று (26) ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.  அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனம் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. 
 

Spread the love