FIFA – ஈரானுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வெற்றி

2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் இங்கிலாந்து தனது முதலாவது போட்டியில் 06 – 02 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது. இங்கிலாந்து அணி இந்தப் போட்டியில் ஈரான் அணியை எதிர்கொண்டிருந்தது. போட்டியில் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து முதல் பாதியில் 3 கோல்களை போட்டது.

இதன் பிரகாரம் முதல் பாதியில் 03 – 0 என்ற அடிப்படையில் இங்கிலாந்து முன்னிலையில் இருந்தது. இரண்டாம் பாதியிலும் இங்கிலாந்து மேலும் 03 கோல்களை போட்டதுடன் ஈரான் 2 கோல்களை அடித்திருந்தனர். அதன் பிரகாரம் போட்டி நேர முடிவில் இங்கிலாந்து 06 – 02 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது.

Spread the love