A/L பிரியாவிடை நிகழ்வுகளுக்கு தடை

உயர்தர மாணவர்களின் உயர்தர வகுப்புகளின் இறுதி நாளின் போது பிரியாவிடை விருந்துகளை நடாத்த வேண்டாம் என பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதன்படி பரீட்சை அனுமதிப்பத்திரங்களை கையளித்ததன் பின்னர் மாணவர்களை எக்காரணம் கொண்டும் பாடசாலைகளில் வைத்திருக்க வேண்டாம் என பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொவிட் தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு வகுப்பின் இறுதி நாளன்று மாணவர்கள் ஒன்று சேர்வதை தவிர்க்க வேண்டும் என்றும் மாணவர்கள் ஒன்றுக் கூடி ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைத் தெரிவிக்க வேண்டாம் என்பதையும் நினைவில் கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

உயர்தர பரீட்சை பெப்ரவரி 7ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், பரீட்சை முடிந்த பின்னரும் மாணவர்கள் சந்திக்கலாம் என்பதால் நாட்டில் தற்போது நிலவும் தொற்றுநோய் நிலைமையை கருத்தில் கொண்டு மீண்டும் பரீட்சையை நடாத்துவதற்கு அவர்களுக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம் என ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.

Spread the love