2021 ஆம் ஆண்டிற்கான ஐ.சி.சி.யின் ஆண்களுக்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருதினை பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அசாம் வென்றுள்ளார்.

27 வயதான பாபர் அசாம் விருதுக்கான பந்தையத்தில் ஷாகிப் அல்ஹசன். ஜான்மேன்மலன் மற்றும் பால் ஸ்டெர்லிங் போன்றவர்களை வீழ்த்தி இந்த பெருமையைப் பெற்றுள்ளார்.
பாபர் அசாம் 2021 ஆம் ஆண்டில் ஆறு ஒருநாள் போட்டிகளில் மாத்திரம் விளையாடியுள்ளார். ஆனால் இந்த ஆண்டு பாகிஸ்தான் விளையாடிய இரண்டு தொடர்களிலும் அவர் முக்கிய பங்களிப்பைச் செய்தார். பாபர் அசாம் கடந்த ஆண்டு ஆறு போட்டிகளில் விளையாடி இரண்டு சதங்களுடன் 67.50 சராசரியில் 405 ஓட்டங்களை குவித்துள்ளார்.