இலங்கையில் கடந்த மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற பெரும் கலவர நிலைமைக்கு மத்தியில் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து, வீடுகளுக்கு தீவைத்தவர்கள் சம்பந்தமான சமூக வலைத்தளங்களில் இருந்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் அடையாளம் காண இலங்கை அரசு, அமெரிக்காவின் உதவியை கோரியுள்ளது.
இதற்கு அமைய சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய குற்றவியல் விசாரணை திணைக்களம் அமெரிக்க புலனாய்வுப் பிரிவான சி.ஐ.ஏ.யிடம் உதவியை கோரியுள்ளது. வன்முறை சம்பவங்கள் நடத்த தினங்களில் அவற்றில் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராக விசாரணைகள் நடந்து வருவதால், சம்பந்தப்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியிருந்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் அழித்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த மே மாதம் 9 ஆம் திகதி இலங்கையில் நடந்த வன்முறை சம்பவங்களின் போது அரசியல்வாதிகளின் வீடுகள் மற்றும் சொத்துக்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. சுமார் 75 பாராளுமன்ற உறுப்பி னர்களின் வீடுகள் எரிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.