2,500 ஆண்டுகள் பழமையான மம்மிக்கள் எகிப்தில் கண்டெடுப்பு

எகிப்தில் கிறிஸ்துவுக்கு 500 ஆண்டுகள் முன்னைய பழமைவாய்ந்த மம்மிக்கள் அடங்கிய சவப்பெட்டிகள் மற்றும் கடவுள்களின் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது. எகிப்தின் தொல்லியலாளர்கள் தொடர்ந்து பிரமிடுகளைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அண்மையில் தொல்லியலாளர்கள் குழுவினர் ஒன்று சக்காராவில் இருந்து புதிய சவப்பெட்டி புதையலைக் கண்டெடுத்துள்ளனர். இவை 2ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையானவை என நம்பப்படுகிறது. நூற்றுக்கணக்கான பழங்கால எகிப்து கடவுள்களின் சிலைகளும் இதன்போது கண்டெடுக்கப்பட்டுள்ளன.

Spread the love