24 இல் ‘வலிமை’

நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் எதிர்வரும் 24 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் அஜித்குமார் நடிப்பில் இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ள திரைப்படம் “வலிமை. இந்த திரைப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ‘வலிமை” திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா காரணமாக பிற்போடப்பட்டது. இந்த நிலையில் ‘வலிமை’ திரைப்படம் எதிர்வரும் 24ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Spread the love