13 மாவட்டங்களில் 59 MOH பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக அடையாளம்

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு 13 மாவட்டங்களில் 59 MOH பகுதிகளை டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் கண்டுள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, காலி, கல்முனை, மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம், குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் அதிக ஆபத்துள்ள பிரதேசங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, அதிக ஆபத்துள்ள வலயங்களில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. சுகாதார அமைச்சின் சமீபத்திய தரவுகளின்படி, இந்த வருடத்தில் இதுவரை 33,000 க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள அதே வேளையில் 20 பேர் டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளனர்.

கடந்த சில வாரங்களாக நோயாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாகத் தெரிவித்த தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு, அதற்கு முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் கடந்த வாரம் 3 வீதத்தால் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அதிக மழை வீழச்சியே டெங்கு பாதிப்புக்கு காரணம் என கூறப்படுகிறது.

Spread the love