1 மில்லியன் மைல்கள் தொலைவில், நாசாவின் 10 பில்லியன் டொலர் தொலைநோக்கி !

அண்ட வெளியின் மர்மங்களை ஆராய நாசா அனுப்பிய “ஜேம்ஸ் வெப்” விண்வெளி தொலை நோக்கி (24/01/2022) திங்கள்கிழமை பிற்பகல் அதன் அமைவிடத்தை அடைந்தது.

விண்வெளியில் 1 மில்லியன் மைல்கள் (பதினாறு லட்சம் கிலோமீட்டர்கள்) பயணித்து இந்த இலக்கை அடைந்துள்ளது. அங்கு அது தரவுகளை சேகரித்து “பிரபஞ்சத்தின் மர்மங்களை” வெளிக்கொண்டுவர ஆரம்பகால நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன்களின் படங்களை கைப்பற்றும் என்று நாசா தெரிவித்துள்ளது.

நாசாவில் தலைமை நிர்வாகி பில் நெல்சன் தனது அறிக்கையில். “பிரபஞ்சத்தின் மர்மங்களை வெளிக்கொணருவதற்கு நாங்கள் ஒரு படி நெருக்கமாக இருக்கிறோம்.” “வெப், தொலைநோக்கியை தனது இருப்பிடத்திர்ற்கு வரவேற்கின்றோம் !” என்று தெரிவித்துள்ளார்.

பூமியில் இருந்து ஒரு மில்லியன் மைல் தொலைவில் உள்ள ஈர்ப்பு சமநிலை புள்ளியான லாக்ரேஞ்ச் பாயிண்ட் -2 ஐச் சுற்றியுள்ள சுற்றுப்பாதையில் வெப்பை அதன் புதிய வீட்டிற்குள் செலுத்துவதற்காக அதன் இறுதி கட்ட பணிகளைச் நிறைவுசெய்யப்பட்டன.

தொலைநோக்கியின் புதிய அமைவிடம், சூரியன் மற்றும் பூமியின் ஈர்ப்பு விசைகளுக்கு இடையில் அமைந்திருப்பதாக தேர்ந்தெடுக்கப்பட்டது, இதன்மூலம் ஒரு சமநிலையை உருவாக்குகிறது, இது வெப் குறைந்தபட்ச எரிபொருளுடன் சுற்றுப்பாதையை சுற்றிவர உதவுகிறது.

நாசாவின் கூற்றுப்படி, தொலைநோக்கியில் உள்ள அதிநவீன வெப்ப பாதுகாப்பு அமைப்பு “வெப் தொலைநோக்கியை நிழலிடவும், மற்றைய அரைப் பாதி, அண்டவெளியை ஆய்வுக்காக பார்க்கவும் வைக்கவும் உதவும்.

மேலும் குறித்த வெப்ப பாதுகாப்பு அமைப்பில் பயன்படுத்தப்படும் அகச்சிவப்பு ( infrared ) தொழில்நுட்பமானது, தொலைநோக்கியானது தனது மேற்பரப்பின் வெப்பத்தைக் கண்டறியவும் அதனைக் குளிர்ச்சியாக வைத்திருக்கவும் உதவும். இதன்மூலம் தூசி மற்றும் வாயுக்களால் சூழப்பட்ட மனிதர்கள் இதுவரை அறிந்திராத,பிரபஞ்சத்தின் பகுதிகளை விஞ்ஞானிகள் தெளிவாகப் பார்க்க உதவும்.

“ஜேம்ஸ் வெப்” தொலை நோக்கியின் பணி குறைந்தது ஐந்தரை ஆண்டுகள் நீடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதன் பணி ஒரு தசாப்தம் வரை நீடிக்கும் என்று நாசா தெரிவித்துள்ளது.

Spread the love