ஹஜ் யாத்திரை தொடர்பில் இலங்கை எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

இந்த வருடம் முஸ்லிம்கள் ஹஜ் யாத்திரையில் கலந்துக் கொள்ள மாட்டார்கள் என முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்த ஆண்டு 1,585 இலங்கையர்களுக்கு ஹஜ் யாத்திரையில் பங்குகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. எனினும் டொலர்கள் தட்டுப்பாடு காரணமாக இம்முறை ஹஜ் பயணத்தில் கலந்து கொள்வதில்லை என தீர்மானித்துள்ளனர்.

தேசிய ஹஜ் குழு, ஹஜ் சுற்றுலா அமைப்பு மற்றும் முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Spread the love