வைரலாகும் விஷ்ணு விஷாலின் ”மோகன்தாஸ்” பட டீசர்..

தமிழ் சினிமாவில் இளம் நடிகர் விஷ்ணு விஷால். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் எஃப்.ஐ.ஆர். இப்படம் வெற்றியடைந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், விஷ்ணு விஷாலின் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. முரளி கார்த்திக் இயக்கத்தில் உருவாகி வரும் மோகன்தாஸ் என்ற படத்தின் விஷ்ணு விஷால் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இவர்களுடன் பூர்ணிமா பாக்யராஜ், லல்லு, பிரகாஷ் ராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் இன்று வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

Spread the love