வேப்பிலை – மஞ்சள் கூட்டணியில் இவ்வளவு அற்புதங்களா..!

நமது வீடுகளில் சாதாரணமாய் வளர்ந்து கிடக்கும் வேப்பிலையும்   மற்றும் அன்றாடம் நம் சமையலறையை அமர்க்களப்படுத்தும் மஞ்சளும் சேர்ந்தால் நம்மிடமுள்ள பல வகையான உடல் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் என்பது அனைவரும் அறிந்ததே, ஆனால் இவை இரண்டையும் சேர்த்து பயன்படுத்தினால் ஏற்படும் அற்புத நன்மைகள் பற்றி நாம் அறியமுடிந்தால்.. .

• வேம்பு மற்றும் மஞ்சளை சேர்த்து பயன்படுத்தும் முறை

• இரண்டையும் சேர்த்து பயன்படுத்தும் சரியான வழி முறை

மஞ்சள் மற்றும் வேப்பிலையில் பெரும் நன்மைகள் உள்ளன. வேம்பு மற்றும் மஞ்சள் இரண்டும் ஆயுர்வேத மருத்துவ குணங்கள் நிறைந்ததாக கருதப்படுகிறது. வேப்பபிலை சாற்றில் மஞ்சள் கலந்து குடிப்பதால் , உடலுக்கு அளவிடமுடியா பல நன்மைகள் கிடைக்கும் என்பது ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. 

வேப்பபிலை மற்றும் மஞ்சளில் ஆன்ரி-ஒக்ஸிடன்ட் மற்றும் ஆன்ரி-பாக்டீரியல் பண்புகள் நிறைந்துள்ளன. எனவே இவை இரண்டையும் சேர்த்து பயன்படுத்துவதன் மூலம், அளப்பரிய ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம். அதாவது, இந்த இரண்டையும் ஒன்றாகப் பயன்படுத்தினால், பல வகையான உடல் பிரச்சனைகளை நம்மால் தீர்த்துக்கொள்ள முடியும்.

மஞ்சளில் கல்சியம், இரும்புச்சத்து, சோடியம், , புரதம், விட்டமின் ஈ, விட்டமின் சி, நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளது. வேம்புக்கு ஆன்டி-செப்டிக், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் நீரிழிவு எதிர்ப்பு போன்ற பண்புகள் உள்ளன. வேப்பிலை மற்றும் மஞ்சளை சேர்த்து சாப்பிட்டால், வைரஸ் காய்ச்சலில் இருந்து உடலை பாதுகாக்கலாம். இது தவிர, இந்த இரண்டையும் சேர்த்துப் பயன்படுத்துவது, பல வகையான பிரச்சனைகளுக்கு தீர்வாகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேம்பு மற்றும் மஞ்சளை பயன்படுத்தலாம் வேப்பமிலை மஞ்சள் ஆகிய இரண்டையும் ஒன்றாகக்கலந்து கசாயம் வைத்துக்குடிப்பதன் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும்.  வேம்பு மற்றும் மஞ்சள் அவற்றின் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஒக்ஸிஜனேற்ற பண்புகள் காரணமாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலைப்பதப்படுத்துகிறது.

வேம்பு மற்றும் மஞ்சளை குளிர்காலத்திலும் உள்ளெடுப்பதன்மூலம்.  பல வித குளிர் கால நோய்களில் இருந்தும் பாதுகாத்துக் கொள்ளலாம்.

இது தவிர வேப்பிலை, மஞ்சளைப் பயன்படுத்தி சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். இது இறந்த சரும செல்கள் மற்றும் முகத்தில் உள்ள பருக்கள் என்பவற்றை நீக்கி முகம்பொலிதரும்.

வேப்பமிலைகள் மஞ்சள் பொடி போட்டு கொதிக்க வைத்த நீரை  தண்ணீருடன் கலந்து  குளித்தால், அல்லது வேப்பிலை மஞ்சளை  நசுக்கி போட்டு ஊற வைத்த தண்ணீரில் குளித்தால், தோல் தொடர்பான எந்த வகையான ஒவ்வாமையையும் போக்கிவிடலாம் என ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகின்றனர்.


Spread the love