வெள்ளிக் கிரகத்தினை விரைவில் ஆய்வு செய்வதற்குத் தயாராகும் இந்தியா

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தினைத் தொடர்ந்து, வெள்ளிக் கிரகத்தினை ஆராய்ச்சி செய்வதற்கு, திட்ட மிட்டுள்ளதாக, இஸ்ரோ விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் தலைவர் சிவன் தெரிவித்தார்.


இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ககன்யான் திட்டத்தின் முதற்படியாக, இவ்வருடம் முதல், மனிதர்கள் இல்லாத, விண்வெளிப் பயணத்திட்டத்தினை, ஆரம்பிக்கவிருப்பதாகக் குறிப்பிட்டார். இதற்காக, விகாஸ் இன்ஜின், கிரையோஜெனிக் ஸ்டேஜ், க்ரூ எஸ்கேப் சிஸ்டம் போன்றவற்றை சோதனை செய்யும் பணியில், ஆய்வுக் குழுக்கள் ஈடுபட்டதாக, அவர் தெரிவித்தார். ரஷ்யாவில், பொதுவான விண்வெளிப்பயிற்சியை, இந்திய வீரர்கள் முடித்து விட்டதாகக் கூறியுள்ள சிவன், இந்திய விண்கலமான ஆதித்யா எல்-1 இன் முதற்கட்ட சோதனை நடவடிக்கைகள், நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Spread the love