வெடித்து சிதறும் கரிம திரவ உரப்போத்தல்

பதவியா கமநல சேவை நிலையத்தில் விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த கரிம திரவ உரம் அடங்கிய பிளாஸ்டிக் கான்கள் வெடித்து சிதறியமை தொடர்பில் கமநல அபிவிருத்தி திணைக்களம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

தனியார் நிறுவனம் ஒன்றினால் தயாரிக்கப்பட்ட இந்த கரிம திரவ உர பிளாஸ்டிக் பொதியை பதவியா பிரதேச விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்காக கடந்த 6 ஆம் திகதி பதவியா கமநல சேவைகள் நிலையம் பெற்றுக்கொண்டது. இந்த நிலையில் கரிம திரவ உரம் – நான்கு லீற்றர் உடைய 6 கான்கள் வெடித்துள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

Spread the love