விவசாய தட்டுப்பாடுகளிற்கு தீர்வை காணலாம்; ரணில், ஐ.நா. உணவு விவசாய ஸ்தாபனத்துடன் பேச்சுவார்த்தை

நாட்டில் விவசாயிகள் எதிர் கொண்டுள்ள பிரச்சினைகளிற்கு உடனடித் தீர்வை காண்பதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுத்தால் ஐந்து ஆறு மாதங்களில் தற்போதைய விவசாய தட்டுப்பாடுகளிற்கு தீர்வை காணமுடியும் என பிரதமர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐ.நா. உணவு விவசாய ஸ்தாபனத்தின் இலங்கைகான பிரதிநிதி விம்லேந்திர சரான் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் பிரதி வதிவிடப்பிரதிநிதி மலின் ஹேர்விக் ஆகியோருடன் நாட்டின் தற்போதைய உணவு நிலை குறித்து இன்று பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். உணவு தட்டுப்பாடு ஆபத்து காரணமாக விவசாய திணைக்கள அதிகாரிகள் உணவு பாதுகாப்பு திட்டத்தை உருவாக்கி வருகின்றனர் என பிரதமர் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தை அடுத்த மாதம் வெளியிடவுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். யுஎன்டியி அதிகாரி இதற்கு தனது ஆதரவை வெளியிட்டுள்ளார்.

விவசாய துறை தற்போது எதிர்கொள்ளும் பெரும் பிரச்சினை உர, எரிபொருள் தட்டுப்பாடு என தெரிவித்துள்ள பிரதமர் தற்போதைய உணவுதட்டுப்பாட்டிற்கு தீர்வை காண்பதற்காக தான் உருவாக்கியுள்ள நகர விவசாய முயற்சி குறித்தும் எடுத்துரைத்துள்ளார். உரத்தட்டுப்பாட்டை சமாளிப்பதற்கு விவசாயிகளிற்கு உதவுவதற்காக விவசாய உதவி திட்டமொன்றை உருவாக்கி வருவதாக யுஎன்டிபி தெரிவித்துள்ளது. இலங்கையின் நகர விவசாய திட்டத்திற்கு உதவுவதற்கு இலங்கைக்கு உதவி வழங்கும் சமூகத்தை சேர்ந்தவர்கள் முன்வந்துள்ளனர் என உணவு விவசாய ஸ்தாபனத்தின் பிரதி தெரிவித்துள்ளார். இதனை வெற்றிகரமாக நிறைவேற்றினால் மேலும் நிதி உதவி கிடைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்காக உணவு நெருக்கடிக்கு பதிலளிக்கும் திட்டமொன்றை உருவாக்கிவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

Spread the love