விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதில் மோசடி: 11 அதிகாரிகள் தொடர்பில் விசாரணை

பெரும்போக நெற்செய்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்பட்ட நிதியை,  வங்கியில் வைப்பிலிட போலி கணக்கு இலக்கங்களை சமர்ப்பித்த 11 அதிகாரிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

விவசாய ஆராய்ச்சி, உற்பத்திக்கான பிரதி அதிகாரிகளும் தொழில்நுட்ப அதிகாரிகளும் அவர்களில் அடங்குவதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

விவசாய அபிவிருத்தி திணைக்களத்திற்கு குறித்த அதிகாரிகள் தவறான விவசாய கணக்கு இலக்கங்களை வழங்கியதன் காரணமாக 1300 மில்லியன் ரூபா நிதி கணக்கில் வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பெரும்போக நெற்செய்கையில் ஈடுபட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்குவதற்காக 8000 மில்லியன் ரூபா நிதியை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கியுள்ளது.  01 ஹெக்டேருக்கு 10,000 ரூபா, 02 ஹெக்டேருக்கு 20, 000 ரூபா வீதம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.  இதனூடாக 12 இலட்சம் விவசாயிகள் பயனடையவுள்ளனர். 

Spread the love