விமான போக்குவரத்து இழப்புக்களுக்கு நஷ்டஈடு கோரும் பிரான்ஸ்

கடந்த கொவிட் தொற்று காலத்தில் முற்றாக முடக்கப்பட்டிருந்த விமான சேவைகள் தற்போது மெல்ல மெல்ல செயற்பட ஆரம்பித்திருக்கின்ற சூழலில் விமான நிலைய பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், மேற்படி பணியாளர்களை தெரிவு செய்வதற்கு 6 மாதங்களிற்கு மேல் தேவைப்படுவதாகவும் Air France-KLM ன் தலைவர் பென் ஸ்மித் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

மேலும் கடந்த கொவிட் தொற்று முடக்க காலத்தில் பில்லியன் யூரோ தொகையில் மேற்படி விமான சேவைகள் இழப்புக்களை சந்தித்திருந்ததாகவும் இந்த இழப்புக்கள் இன்னமும் ஈடு செய்யப்பட முடியாத நிலையில் இருப்பதாகவும் தலைவர் பென் ஸ்மித் தெரிவித்திருந்தார்.இதனால் பயணிகள் விமான நிலையத்திற்கு தாமதம் இன்றி விரைவாக வரும்படியும், பாதுகாப்பு பணியாளர்களின் பற்றாக்குறை காரணமாக ஏற்படக்கூடிய அசௌகரியங்களை பொறுத்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love