அதிகாரிகளின் ஆதரவுடன் வவு/தெற்கு பிரதேச செயலகத்தினுள் புத்தர் சிலை

வவுனியா தெற்ற்கு பிரதேச செயலாளர் அலுவலகத்தினுள் புத்தர் சிலையொன்றினை பெளத்த பிக்குக்கள் மற்றும் பிரதேச செயலாளர் இணைந்து பிரதிஷ்டை செய்துள்ள சம்பவமொன்று அண்மையில் நடைபெற்றுள்ளது.

வவுனியா மாவட்டத்தின் வவுனியா தெற்கு பிரதேசச் செயலாளர் பிரிவு தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியில் அமைந்துள்ளது. வவுனியா மன்னார் வீதியில்   காமினி வித்தியாலயத்துக்கு அண்மையில் அமைந்துள்ளது.  குறித்த பகுதி, தமிழ் பேசும் மக்களைச் செறிவாகக் கொண்டதுடன் அப்பிரதேச செயலகப்பிரிவில் உதவிச்செயலகர் உட்பட்ட முக்கியபதவிகளிலும் அதிகளவான தமிழ், முஸ்லீம் உத்தியோகத்தர்களே கடைமையை ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறானதொரு நிலையில் இப் பிரதே செயலக வளாகத்தினுள் பிரமாண்டமான மேடையொன்றில் புத்தரின் சிலை பிரதிஷ்டையானது வடக்கில் தற்சமயத்தில் இடம்பெற்றுவரும் பெளத்தமயமாக்கலின் ஓர் பகுதியோ என தமிழ் மக்களால் பார்க்கப்படுகிறது. அரச ஆதரவுடன், பிரதேச செயலகங்களின் ஊடாக , அவர்களின் ஒத்துழைப்புடன் இப் பெளத்த மயமாக்கல் இடம்பெறுகின்றது என பொதுமக்கள் விசனமடைந்துள்ளனர்.

Spread the love