வரி பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காவிட்டால் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட முடிவு

வரி பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காவிட்டால் எதிர்வரும் 03ஆம் திகதியில் இருந்து மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பிலான இறுதிக் கடிதம் இன்று(30) ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக தொழிற்சங்க கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு நேற்று( 29) கொழும்பில் கூடியது.

மருத்துவம், பல்கலைக்கழகம், வங்கி, பொறியியலாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த தொழில் வல்லுநர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டு அடுத்தகட்ட தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் ஆராய்ந்திருந்தனர்.

ஒரு இலட்சம் ரூபாவிற்கு மேலும் வருமானம் பெறுகின்றவர்களிடம் வரி அறவிடப்படுகின்றமை உள்ளிட்ட வரி திருத்தத்தை கண்டிக்கும் வகையில் 47 தொழிற்சங்கங்களின் பங்குபற்றுதலுடன் இந்த கூட்டமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது. வங்கி வட்டி வீதம் அதிகரிப்பு, மின்சாரக் கட்டண அதிகரிப்பு மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு ஆகியவற்றுக்கு நிவாரணம் கோருவதும் இந்த கூட்டமைப்பின் நோக்கமாகும்.

Spread the love