வரவு செலவுத் திட்டம் ஒத்தி வைத்தால் அடுத்த ஆண்டில் எந்த செலவும் அனுமதிக்கப்படமாட்டாது- ஆணையாளர்

மன்னார் பிரதேச சபையில் நேற்று முன்தினம்  இடம்பெற்ற குழப்பங்கள் தொடர்பில் உள்ளூராட்சி ஆணையாளர் நேற்றைய தினம் நேரில் சென்று ஆராய்ந்தார்.

வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு தினத்தில் கட்சி உறுப்பினர்களிடையே ஏற்பட்ட முரண்பாட்டை காரணம் காட்டி வரவு செலவுத் திட்டம் வாக்கெடுப்பு இன்றி ஒத்தி வைக்கப்பட்டது. இது தொடர்பிலும், முரண்பாடுகள் தொடர்பிலும் ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதனால் உடனடியாக நேரில் சென்ற ஆணையாளர் இவை தொடர்பில் ஆராய்ந்துள்ளார்.

இவற்றின் அடிப்படையில் உறுப்பினர்களிடையே ஏற்பட்ட முரண்பாட்டின் அடிப்படையில் வரவு செலவுத் திட்டம் ஒத்திவைக்க முடியாது எனவும் வரவு செலவுத்திட்ட நிறைவேற்றத்திற்கான கால வரையறைகளும் அதில் அடங்குவதனால் உடன் வரவு செலவுத்திட்டம் சபைக்கு சமர்ப்பித்து அதனை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு நிறைவேற்றத் தவறினால் 2022ஆம் ஆண்டின் ஆரம்பம் முதலே சபையின் எந்தச் செலவும் சட்ட அனுமதியற்ற செலவாகவே கணிக்கப்படும் என்பதனால் எந்தவொரு செலவும் மேற்கொள்ள முடியாத நிலைமையே ஏற்படும் என்பதனை அறிவுறுத்தியதாக தெரியவருகின்றது.

Spread the love