வடக்கு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேருக்கு விளக்கமறியல்

இந்திய மீனவர்கள் 12 பேரும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை நீதவான் பொன்னுதுரை கிருஷாந்தன் முன்னிலையில் இன்று(13) காலை மீனவர்கள் 12 பேரும் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்.வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன் பிடித்த குற்றச்சாட்டில் 12 மீனவர்களுடன் படகொன்று நேற்று(12) அதிகாலை இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

இதேவேளை, யாழ்.அனலைதீவு பகுதியில் படகொன்றுடன் கைது செய்யப்பட்ட மேலும்  04 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஊர்காவற்றுறை நீதவான் ஜெ.கஜநிதிபாலன் முன்னிலையில் தமிழக மீனவர்கள் 04 பேரும் நேற்று(12) மாலை ஆஜர்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 24 ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

SEA OF SRI LANKA எனும் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் தமிழகத்தின் நாகை மற்றும் புதுக்கோட்டை பகுதிகளை சேர்ந்த 16 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Spread the love