வடக்கில் காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதியின் முடிவு

வடக்கில் காணிகளை விடுவிப்பது தொடர்பில் சாதகமான, தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் என ஜனாதிபதி உறுதி வழங்கியுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

வலி வடக்கு, மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்திற்கு ​நேற்றுமுன்தினம்(02) விஜயம் செய்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழிலாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அபிலாஷைகளுக்கு தீர்வு காணும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவை உப குழுக் கூட்டத்திலேயே ஜனாதிபதி இந்த உத்தரவாதத்தை வழங்கியுள்ளார். 

அதற்கமைய, பருவ மழைக் காலம் நிறைவடைந்ததும் நேரடியாக சம்மந்தப்பட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்து தீர்க்கமான, சாதகமான முடிவுகளை எடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக அமைச்சரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Spread the love