ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்; பற்றி எரிந்தது லிவிவ் எரிபொருள் கிடங்கு!

உக்ரேனிலுள்ள லிவிவ் அருகே உக்ரேனியப் படைகளால் பயன்படுத்தப்பட்டு வரும் எரிபொருள் கிடங்கை ரஷ்யாவானது நீண்ட தூர ஏவுகணைகள் மூலம் தாக்கியதோடு, உக்ரேனின் டிரோன்கள் மற்றும் ரேடார்  அமைப்புகளையும் அழித்தது. 

மேற்கு உக்ரைன் நகரமான லிவிவ் நகரில் உள்ள ராணுவ இலக்குகளை, மிக துல்லியமாக தாக்க வல்ல ரஷ்யாவின் கப்பல் ஏவுகணைகள் மூலம் தாம் தாக்கியழித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 26) தெரிவித்துள்ளது என்பதை லண்டனிலுள்ள ரொய்ட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் செய்தி வெளியாகியுள்ளது.

லிவிவ் அருகே உக்ரைன் படைகளால் பயன்படுத்தப்படும் எரிபொருள் கிடங்கை ரஷ்யா நீண்ட தூர ஏவுகணைகள் மூலம் தாக்கியதோடு, உக்ரைனின் போர்த்தளபாடங்களான  டிரோன்கள், விமான எதிர்ப்பு அமைப்புகள், ரேடார்  அமைப்புகளையும் அழித்தது.  டாங்கிகள் வைக்கப்பட்டிருந்த இடங்களையும் ஏவுகணைகளை கொண்டு ரஷ்யா தாக்கியதாக  ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம்  செய்தி வெளியிட்டுள்ளது.

“ரஷ்ய கூட்டமைப்பின் ஆயுதப்படைகள் சிறப்பு இராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாக தாக்குதல் நடவடிக்கைகளை ஒருமாதத்துக்கு மேலதிகமாக தொடர்கின்றன” என்று அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். லிவிவ் பகுதியில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல்களின் வீடியோவை அமைச்சகம்  வெளியிட்டது.

போலந்தின் எல்லையில் இருந்து 60 கிமீ (40 மைல்) தொலைவில் உள்ள லிவிவ்   நகரில் உள்ள நேட்டோ-உறுப்பு நாடுகளை சேர்ந்த அதிகாரிகள், ஏவுகணைத் தாக்குதல்களில் மக்கள் காயமடைந்ததாகக் கூறினர். கிவிவ் அருகே S-300 ஏவுகணைகள் மற்றும் BUK விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகளின் ஆயுதக்களஞ்சியத்தை அழிக்க  ஏவுகணைகளையும் தாம்  பயன்படுத்தியதாக ரஷ்ய  அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும்  ரஷ்யப் படைகள் பல ஆளில்லா விமானங்களையும் அழித்தொழித்துள்ளன.

தற்போது மேலும் அதிக தாக்குதல்களைத்தீவிரப்படுத்தியுள்ள ரஷ்யா உக்ரேனிய எரிபொருள் மற்றும் உணவு சேமிப்பு கிடங்குகளை அழிக்கத் தொடங்கியுள்ளதாக  உக்ரேனிய உள்துறை அமைச்சக ஆலோசகர் வாடிம் டெனிசென்கோவும் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தார்.

Spread the love