ரஷ்யா-உக்ரைன் போரில், உக்ரைனில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புக்கள் தொடர்பில் ஐ.நா தகவல்

ரஷ்யா-உக்ரைன் போரில், உக்ரைனில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புக்கள் தொடர்பில் ஐ.நா தகவல் வெளியிட்டுள்ளது.

உக்ரைனை ஆக்கிரமிக்கும் முனைப்பில் ரஷ்யா செயல்படுவதால் பல ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் உக்ரைனிய மக்கள் 85000 பேர் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்படுவதாக ஐ.நா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

உக்ரைனில் கொத்து கொத்தாக குவிக்கப்படும் சடலங்கள்!வெளியான அதிர்ச்சி தகவல் | Number Of People Killed By Russia In Ukraine

மேலும் பொது மக்களை பாதிக்கும் வகையில் ரஷ்யா,ஆக்கிரமிப்பு எல்லைகளை விரிவுபடுத்த மக்கள் வாழும் நகரங்களில் குண்டு வெடிப்பு, தானியங்கி விமானம் போன்றவற்றின் மூலம் தாக்குதல் நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் முழுவதும் இன்னும் பல ஆயிரம் சரிபார்க்கப்படாத இறப்புகள் இருக்கலாம் என அஞ்சப்படுவதாக ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு மேலும் கூறியுள்ளது.

பெரும்பாலான இறப்புகள் உக்ரைனிய அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்பட்ட பிரதேசத்திலும், ரஷ்யப் படைகளின் தாக்குதலின் கீழும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளில் மட்டும் 3,927 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனில் கொத்து கொத்தாக குவிக்கப்படும் சடலங்கள்!வெளியான அதிர்ச்சி தகவல் | Number Of People Killed By Russia In Ukraine

2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மற்றும் இம்மாதத்தில் படையெடுப்பு தொடங்கப்பட்டதற்கு இடையில் 8,490 பொதுமக்கள் இறந்துள்ளதாகவும் மற்றும் 14,244 பேர் பாரிய காயங்களுடன் வாழ்ந்து வருவதாகும் ஐ.நா அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தியதாக ஐ.நா-ஆணையிடப்பட்ட புலனாய்வு அமைப்பு கடந்த மாதம் கண்டறிந்துள்ளது. பொதுமக்களை குறிவைப்பதும், அட்டூழியங்களை செய்வதாகவும் ஐ.நா கூறிய குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது.    

Spread the love