ரஸ்ய – ஜேர்மனி கடலடி எரிவாயு விநியோகத் திட்டம் இடை நிறுத்தம்

உக்ரேய்ன் விவகாரத்தால் ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்க 27 ஐரோப்பிய நாடுகள் இணக்கம் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் ஜேர்மனிக்கான ரஸ்ய எரிவாயு விநியோகத் திட்டத்தை ஜேர்மனி இடை நிறுத்தியுள்ளது.


ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அருகே உள்ள கடல் பகுதியில் இருந்து ஜேர்மனியின் லப்மின்வரை பால்டிக் கடலுக்கு கீழே ஆயிரத்து 200 கிலோ மீற்றர் நீளத்துக்கு நோர்ஸ்ட்ரீம் 2(Nord Stream 2) என்ற எரிவாயு குழாய் மூலம் ரஷ்யாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயுவை கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே நோர்ஸ்ட்ரீம் 2 எரிவாயு குழாய் திட்டத்துக்கு வழங்கிய ஒப்புதலை ஜேர்மனி இடை நிறுத்தியுள்ளது. கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் இப்பணிகள் முழுமையாக முடிந்தாலும் இன்னும் எரிவாயு கொண்டு செல்லப்படாத நிலையில் அதற்கான ஒப்புதலை ஜேர்மனி இரத்து செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Spread the love