ரஷ்யாவிடம் மலிவு விலையில் கச்சா எண்ணெய் கொள்வனவு அரசியல் கலப்பு துளியும் இல்லை: இந்தியா

இந்தியாவானது ரஷ்யாவிடம் இருந்து மலிவு விலையில்  எரிசக்தி வாங்குவது ஒரு சட்டபூர்வமான  பரிவர்த்தனையாகும் , அதனை அரசியலாக்கக்கூடாது என இந்தியா கூறியுள்ளது. 

ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் மூண்ட நாளில் இருந்து கச்சா எண்ணெய் விலை தொடர் ஏறுமுகமாகவே உள்ளது. இந்நிலையில் ரஷ்யாவிடம் இருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியன் ஒயில் கார்பரேஷன் நிறுவனம் ரஷ்யாவுடன் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது.  

ரஷ்யாவுடனான இந்தியாவின் இந்த சலுகை விலை கச்சா எண்ணெய் ஒப்பந்தமானது தற்போது அமெரிக்காவின் தடைகளை மீறிய செயல் அல்ல எனப்பேசப்பட்டாலும் இது தொடர்பில் , அமெரிக்கா தனது அதிருப்தியை பதிவு செய்யாமலுமில்லை, ஆனாலும், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து மலிவு விலையில்  எரிசக்தி வாங்குவது ஒரு சட்டபூர்வமான  பரிவர்த்தனை என்றும், அதனை அரசியலாக்கக்கூடாது என இந்தியா கூறிவருகிறது. 

“இந்தியா மாற்று எரியாற்றல் ஆதாரங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், இத்திட்டம் குறித்து அனைத்து உற்பத்தியாளர்களும் புதுவகை திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதை அரசு வரவேற்கிறது என்ற இந்தியாவின் எரிசக்தி வர்த்தகர்களுடனும் மற்றும் உலகளாவிய எரிசக்தி சந்தைகளுடன் இணைந்து இத்திட்டம் சம்பந்தமாக செயலாற்றி வருகின்றனர்,” என்று ஆதாரங்களை மேற்கோள் காட்டி ஏ என் ஐ தெரிவித்துள்ளது.

“எண்ணெய் தன்னிறைவு கொண்ட நாடுகளிடமோ அல்லது ரஷ்யாவிடம் இருந்தோ எண்ணை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு வர்த்தக தடை குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ள யோசிக்கக்கூடாது என்றும், இந்தியாவின் முறையான எரிசக்தி பரிவர்த்தனைகளை உலகநாடுகள் அரசியலுடன் கலக்கக்கூடாது   என்றும் ,இந்தியா  கூறிவருகிறது.

இந்தியாவானது தனது சுய ஆற்றல் தேவைகளை பூர்த்தி செய்ய இறக்குமதியை அதிகம் சார்ந்துள்ளது.  அதாவது இந்திய கச்சா எண்ணெய் தேவையில் கிட்டத்தட்ட 85% (ஒரு நாளைக்கு 5 மில்லியன் பீப்பாய்கள்) இறக்குமதி செய்யப்பட வேண்டியது கட்டாயமானது. பெரும்பாலான இறக்குமதிகள் மேற்கு ஆசிய நாடுகளிடமிருந்தே பெற்றுக்கொள்ளப்படுகிறது. (ஈராக் 23%, சவுதி அரேபியா 18%) , UAE 11%) என இந்தியா கூறி நிற்கிறது.

அடுத்தபடியாக  ரஷ்யாவிடம் இருந்து இந்தியா சலுகை விலையில் கச்சா எண்ணெய் வாங்குவது அமெரிக்காவின் தடைகளை மீறிய செயல் அல்ல என்பதை அமெரிக்க நிர்வாகமும்  தெளிவுபடுத்தியுள்ளது.

அதே சமயம், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு மத்தியில் இந்தியாவின் நிலை குறித்து கருத்து தெரிவித்த வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி, “இன்றைய சூழலில் இந்தியாவின் நிலைப்பாடானது , வரலாற்றில் எவ்விதம் பதிவு செய்யப்படுகிறது என்பதனையும் அது  நினைவில் கொள்ளுதல் வேண்டும், என்றார். அத்துடன் “ரஷ்யாவுக்கான ஆதரவு என்பது யாதெனில் , போரினால் ஏற்படும் பேரழிவுக்கான ஆதரவே” என்பதை இந்தியா கருத்தில் கொள்ள வேண்டும்” என்றார்.

உக்ரைன் ரஷ்யா பிரச்சனையில் இந்தியாவானது யாரையும் ஆதரிக்கவில்லை என்பதும், மேலும்  பேச்சுவார்த்தை மூலமே நாடுகளுக்கிடையேயான  கருத்து வேறுபாடுகளை தீர்க்க வேண்டும், என்பதையும்  வலியுறுத்தி வருகிறது. அது மட்டுமல்ல ரஷ்யாவுக்கு எதிரான ஐ.நா.வின் எந்த தீர்மானத்தையும் நிறைவேற்றுவதற்கான வாக்கெடுப்பிலும் இந்தியா பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் 30 லட்சம் பீப்பாய்கள்  கச்சா எண்ணெயை ரஷ்யாவிடமிருந்து  20-25% தள்ளுபடி விலையில் வாங்குவதாக ரொய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அதிலும் மிக முக்கியமாக, கச்சா எண்ணெய் இறக்குமதியின் போது அமெரிக்க டொலரில் இல்லாமல் இந்திய ரூபாயில் கட்டணம் செலுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Spread the love