மேலும் 54 சீன செயலிகளுக்கு இந்தியா தடை

பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்த காரணமாக 54 சீன செயலிகளுக்கு இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்தத் தகவலை இந்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயர் மட்ட ஆதாரங்கள் தெரிவித்துள்ளன. 2020 ஜூன் முதல், TikTok, Shareit, Wechat, Helo,Likee,UC News, Bigo Live, UC Browser, ES File Explorer மற்றும் Mi Community போன்ற பிரபலமான பயன்பாடுகள் உட்பட சுமார் 224 சீன ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி பயன்பாடுகளை இந்திய அரசாங்கம் தடை செய்துள்ளது. இந் நிலையிலேயே புதிய தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

Spread the love