மேலும் இலங்கைக்கு சீனாவின் உதவி!

இந்த நாட்டில் வறுமையைப் போக்கவும் அரிசி உற்பத்தியை ஆதரிக்கவும் தயாராக இருப்பதாக சீனா வலியுறுத்துகிறது. பிரதமர் தினேஷ் குணவர்தனவைச் சந்தித்தபோதே சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல்துறை உறுப்பினர் கலாநிதி யுவான் ஜியாஜுன் இதனைத் தெரிவித்துள்ளார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல்துறை உறுப்பினரும் சீனாவின் சோங்கிங் நகர நகரசபைக் குழுவின் செயலாளருமான ஜியாஜூன் 22/07/2023 பிரதமர் தினேஷ் குணவர்தனவைச் சந்தித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது கலப்பின அரிசி மற்றும் ஏனைய உணவுப் பயிர்கள் தொடர்பான நிபுணர்களை இலங்கைக்கு வழங்குவதற்கு அவர் இணங்கியுள்ளார். அரிசி விளைச்சலைப் பல மடங்கு அதிகரிக்கவும், வறுமையை ஒழிப்பதுடன் உணவுப் பாதுகாப்பையும் ஏற்படுத்த முடியும் என்றும் திரு யுவான் ஜியாஜூன் வலியுறுத்தினார் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்தது.

இந்தக் கலந்துரையாடலின் போது, ​​கடனை மறுசீரமைத்து நாட்டின் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்த சீனாவின் ஆதரவை எதிர்பார்ப்பதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

Spread the love