மூன்று மாவட்டங்களில் குடியிருப்பு பகுதிகளில் மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை

காலி, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு அனர்த்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என்று தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் இன்று(14) காலை 6.30 மணிக்கு அறிவித்துள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் அகலவத்த, மத்துகம, பண்டாரகம, பாலிந்தநுவர, புளத்சிங்கள, இங்கிரிய, வலல்லாவிட்ட, தொடங்கொட ஆகிய பிரதேசங்களில் மண்சரிவு ஆபத்து காணப்படுகிறது.

இரத்தினபுரி மாவட்டத்தில் எஹலியகொட, குருவிட்ட, இரத்தினபுரி, எலப்பாத்த, அயகம, கிரியெல்ல, பெல்மெடுல்ல, நிவித்திகல, கலவான ஆகிய பிரதேசங்களில் மண்சரிவு ஆபத்து காணப்படுகின்றது.

இதேவேளை நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழையுடன் கூடிய காலநிலை எதிர்வரும் 24 மணித்தியாலங்களிலும் நீடிக்கும் என வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டை அண்டியுள்ள வளிமண்டலத்தில் நிலவும் தளம்பல் நிலை இதற்கு காரணமாகும். கடல் பிரதேசங்களில் கொந்தளிப்பு ஏற்படும் என்பதால் மீன்பிடி மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளை தடுக்குமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது

Spread the love