மூன்றாம் சார்லஸ் மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயத்தாள் அறிமுகம்

மூன்றாம் சார்லஸ் மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயத்தாளின் புதிய தோற்றம், இங்கிலாந்து வங்கியினால் வெளியிடப்பட்டுள்ளது. தற்போதுள்ள 5,10,20 மற்றும் 50 நாணயத்தாள்களின் வடிவமைப்பில் உருவப்படம் மட்டுமே மாற்றப்படுமெனவும், 2024 ஆம் ஆண்டின் நடுப்பகுதியிலிருந்து குறித்த நாணயத்தாள் புழக்கத்தில் வருமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

புதிய நாணயத்தாள்களின் முன்பக்கத்திலும், பாதுகாப்பு சாளரத்திலும் மன்னரின் உருவப்படம் இடம்பெறும் என்பதுடன், புதிய நாணயத்தாள்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு ஆரம்பித்த பின்னரும், கடைகளில் இருக்கும் நாணயத்தாள்கள் ஏற்றுக்கொள்ளப்படுமெனவும், அந்த நாட்டின் மத்திய வங்கி தெரிவித்தது.

1960ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்து வங்கியின் நாணயத்தாள்களில் தோன்றிய முதலாவது மற்றும் ஒரே நபர் எலிசபெத் மகாராணி ஆவார். தற்போது சுமார் 80 பில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள சுமார் 4.5 பில்லியன் இங்கிலாந்து வங்கியின் நாணயத்தாள்கள் பயன்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love